தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மகிந்த
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்திற்கு விஜயம்செய்த போது ஊடகவியலாளர் எமுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
வரவிருக்கும் தேர்தலுக்கு தனது கட்சி தயாராக உள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி விலகியமை தேர்தலை தாமதப்படுத்தும் சூழ்ச்சியா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பிரதமர், தேர்தலை ஏன் தாமதப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் பலமாக இருக்கலாம் என்ற சமீபத்திய கூற்றுகள் பற்றி கேட்கப்பட்டபோது, இந்த கூற்றுக்கள் 'சில நபர்களால்' மட்டும் உருவாக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பலமான கட்சியாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன "எந்த தேர்தலுக்கும் தயாராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 36 விநாடிகள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
