இலங்கையின் பெண் தொழில் முனைவோருக்கு நிதி வழங்கும் அமாிக்கா
இலங்கையின் சமூகம் சார்ந்த வா்த்தக முயற்சிகளின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக இலங்கையின் DFCC வங்கிக்கு அமெரிக்க அரசாங்கம் 150 மில்லியன் டொலா் நிதியுதவியை வழங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கான அமெரிக்க அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தால் (DFC) வழங்கப்படும் மிகப்பெரிய கடன் வழங்கல் ஆகும்.
இது உள்ளூர் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு, குறிப்பாக பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட 265 மில்லியன் டொலர் நிதியுதவின் ஒரு பகுதியாகும்.
பெண் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் மிகப் பாாிய பிரச்சனைகளில் ஒன்றான நிதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த கடன் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமாிக்கத் துாதரகம் தொிவித்துள்ளது..
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam