உறங்கிக்கொண்டிருந்த நபர் மீது வாள்வெட்டு (VIDEO)
கிளிநொச்சி பகுதியில் நேற்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது கார் ஒன்றில் வந்த குழுவினர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி கோரக்கன் காட்டுப் பகுதியில் நேற்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதனுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வேளையில் மேற்குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்யவில்லை என கண்டித்து இன்றைய தினம் (13-11-2021) கோரக்கன்கட்டு கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக ஒன்று திரண்ட மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதால் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இன்று பகல் வருகை தந்த கிளிநொச்சி பொலிஸார்
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இரண்டு சந்தேக
நபர்களையும் அவர்கள் பயணித்த, சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் கார்
கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு தாங்கள்
உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் நம்பிக்கை தெரிவித்ததை அடுத்து
அமைதியின்மையில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.