விஷேட நுளம்பு ஒழிப்புத் திட்டம் நாளைமுதல் ஆரம்பம்
மழை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் விஷேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை(20.11) முதல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள நற்பிட்டிமுனை பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளதென கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர் . எம் . அஸ்மி (Dr. ARM.Asmy) அறிவித்துள்ளார்.
மேற்படி விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டமானது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் (Dr.G.Sugunan) வழிகாட்டலின் கீழ் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர் . எம் . அஸ்மி (Dr. ARM.Asmy) தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மழை காலங்களில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும். எனவே நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, மக்கள் தங்கள் வீடுகள், சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான பொருட்கள் அனைத்தையும் சேகரித்து, உங்கள் பிரிவுகளுக்கு வருகைதரும் பிரதேச சபை உழவு இயந்திரத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இவ் விஷேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கல்முனை மாநகர சபையுடன் இணைந்து, பாதுகாப்பு படையினரை உள்ளடக்கிய டெங்கு கண்காணிப்பு குழுக்கள் பரிசோதனையில் ஈடுபடவுள்ளனர்.
எனவே மேற்குறித்த பரிசோதனையின் போது நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் கண்டுபிடிக்கப்படுமாயின் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.
ஆகவே பொதுமக்கள் தங்களது வீட்டையும் அதனை சூழவுள்ள இடங்களையும் சுத்தமாகவைத்து நுளம்புகளின் ஆபத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வோம் என்பதுடன் வருமுன் காப்போம்! வளமாய் வாழ்வோம்! எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
