தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு - சந்தேக நபர்கள் இருவர் கைது
எல்பிட்டிய - பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தல்கஸ்வல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இருவர் என தெரியவந்துள்ளது.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (16.3.2024) இடம்பெற்றுள்ளதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 11ஆம் திகதி பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவல சந்தி பகுதியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வூ-56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்
குற்றத்தை திட்டமிட்ட சந்தேகநபரும் அதற்கு உதவிய சந்தேக நபருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 03 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 21 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
