தெற்கில் நான்கு மாதங்களில் 35 போ் சுட்டுக்கொலை
இவ்வருடத்தின் மே மாத இறுதி முதல், நான்கு மாத காலப்பகுதிக்குள் தெற்கில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் மொத்தமாக 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ஆயுதங்களை கைப்பற்ற விசேட நடவடிக்கைகள்
இந்தக் காலப்பகுதியில் 29 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், இந்தச் சம்பவங்களின்போது மொத்தம் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
பல்வேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 64 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், 15 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதுடன் அவர்கள் வசமுள்ள ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்கான
விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
மேலும் தெரிவித்தார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
