சீனி வரி குறைப்பால் அரசு இழந்த 15.5 பில்லியன் ரூபாயை மீள அறவிடுமாறு பரிந்துரை
இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கான வரி குறைக்கப்பட்டதன் காரணமாக அரசு இழந்த வரி வருமானத்தை, வரி குறைப்பின் மூலம் இலாபத்தை பெற்றுக்கொண்வர்களிடம் மீண்டும் அறவிட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தேசிய கணக்காய்வு ஆணைக்குழு ஆகியன அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளன.
ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் விசேட வணிக வரி 25 சதமாக குறைக்கப்பட்டதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நிவாரணம் நுகர்வோருக்கு கிடைக்காமல் போனது தொடர்பான தேசிய கணக்காய்வு ஆணைக்குழு நடத்திய கணக்காய்வுக்கு அமைய அந்த பரிந்துரையை வழங்குவதாக அதன் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் விசேட வணிக வரியை அரசாங்கம் கடந்த 2020 ஆம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி 25 சதமாக குறைத்தது.
இந்த விசேட வணிக வரி 25 சதமாக குறைக்கப்பட்டதன் காரணமாக 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர், 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 ஆம் திகதி வரையான நான்கு மாத காலத்திற்குள் மாத்திரம் அரசுக்கு 16 ஆயிரத்து 763 மில்லியன் ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வில் கண்டறியப்பட்டது.
இந்த குறுகிய காலப் பகுதியில் இலங்கை சதோச நிறுவனம் அவ்வப்போது தனியார் இறக்குமதியாளர்களிடம் இருந்து அதிக விலைக்கு சீனியை கொள்வனவு செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ததன் மூலம் அந்த நிறுவனம் சுமார் 102 மில்லியன் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
மேலும் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையான சில மாதங்களில் மாத்திரம் பிரமீட் வில்மா என்ற நிறுவனத்தின் சீனி இறக்குமதியானது அசாதாரணமக 1222 வீதமாக அதிகரித்தது.
நுகர்வோருக்கு நிவாரணத்தை வழங்கும் எதிர்பார்ப்பில் அரசாங்கம் சீனி இறக்குமதி வரியை குறைத்த போதிலும் அந்த நோக்கம் நிறைவேறாது, இறக்குமதியாளர் மற்றும் சில வர்த்தகர்கள் மாத்திரம் பொருளாதார நன்மையை பெற்றுக்கொண்டுள்ளதாக தேசிய கண்காய்வு ஆணைக்குழு கண்டறிந்தது.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri