தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு: சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பு

Dhayani
in வேலை வாய்ப்புReport this article
தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய நேர்காணல் நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை அதற்கான நேர்முகத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தாதியர் பயிற்சிக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்காணல் தொடர்பான தகவல்கள் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்
இதன்படி, சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று நேர்காணலின் திகதி, இடம் மற்றும் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெறுமாறு விண்ணப்பதாரர்களுக்கு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
2019-2020 உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களின் அடிப்படையில் தகுதிப் பரீட்சையை நடத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, இதற்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri
