காலிமுகத்திடலில் அனுமதியின்றி தங்கியுள்ளவர்கள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
காலி முகத்திடலிலுள்ள போராட்டக்களத்தில் அனுமதியின்றி தங்கியுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் S.ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடையாளம் காணப்பட்டுள்ள போராட்டக்காரர்கள்
போராட்டக்களத்தில் அனுமதியின்றி தங்கியுள்ளவர்களுக்கு எதிராக நகர அபிவிருத்தி அதிகார சபை, துறைமுக அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு உரித்தான இடங்களில் அனுமதியின்றி தங்கியிருத்தல், கூடாரங்கள் உள்ளிட்ட நிர்மாணங்களில் ஈடுபடல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் இதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ள காணொளிகள் ஊடாக, போராட்டக்களத்தில் தங்கியுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, போராட்டம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் கையடக்க தொலைபேசி உரையாடல்கள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியன பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri