அவசர காலச்சட்டம் போராட்டக்காரர்களுக்கு எதிரானதல்ல! தினேஷ் குணவர்த்தன
போராட்டக்காரர்களை அடக்கும் நோக்கில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தினேஷ் குணவர்த்தன பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பின் முதன்முறையாக நேற்றைய தினம் அவரது தந்தையார் பிலிப் குணவர்த்தனவின் சமாதிக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப கவனம்

கொஸ்கம, பொரளுகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பிலிப் குணவர்த்தனவின் சமாதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வௌியிட்ட தினேஷ் குணவர்த்தன,
இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும்.
அதன் மூலமாக மட்டுமே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப முடியும்.
அதற்காகவே அரசாங்கம் தற்போதைக்கு அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் முடிவை மேற்கொண்டது.
மற்றபடி போராட்டக்காரர்களை அடக்கும் நோக்கில் அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் தினேஷ் குணவர்த்தன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam