இதே நிலை தொடர்ந்தால் வீடுகளிலும், வைத்தியசாலைகளிலும் சடலங்கள் குவியும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மலர்ச்சாலை உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக இலங்கை மரண சடங்குகளுக்கான பணிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்தாபகர் கவிந்து பனாகொட தெரிவித்துள்ளார்.
இறுதிக்கிரியைகள், அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படாமையால் சடலங்களை எரிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக வரிசைகளில் காத்திருந்து எரிபொருளினை பெற்றுக்கொண்டுள்ள போதிலும் தேவையான அளவு எரிபொருள் கிடைப்பதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறையின் எதிரொலி
இந்நிலை தொடருமானால், எதிர்வரும் நாட்களில் வீடுகளிலும், வைத்தியசாலைகளிலும் சடலங்கள் நிரம்பிக் கிடக்கக்கூடும் எனவும் கவிந்து பனாகொட எச்சரித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறையினால் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்வதிலும் பின்னர் வீடுகளுக்கு கொண்டு செல்வதிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri