எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு - பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக எரிபொருள் விலை உயர்வு குறித்து பொய் வதந்திகள் பரவி வருவதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமாரகே விளக்கமளித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு குறித்து பரவும் வதந்தி
இதேவேளை, அடுத்த சில நாட்களுக்குள் இரண்டு மசகு எண்ணெய் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து தலா 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை அந்த கப்பல்கள் ஏற்றி வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை உயர்வு குறித்து பரவும் வதந்திகளால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே தற்போது தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.