பெண்ணொருவரின் வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபா பணம்! விசாரணையில் அம்பலமான உண்மை
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சுசிமல் அசாங்க என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் போதைப்பொருள் வலையமைப்புக்கு பணம் பரிமாறப்பட்ட வங்கிக் கணக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வங்கிக் கணக்கின் ஊடாக 18 மாத காலப்பகுதிக்குள் 13 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் புழக்கத்தில் இருந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணொருவரின் பெயரில், போலிப் பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி இந்த வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
13 கோடி ரூபா பணம்
குறித்த பெண் 2024 ஆம் ஆண்டு 25,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்த வங்கிக் கணக்கை ஆரம்பித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஹந்தயா என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய நண்பரான சுசிமல் அசாங்கவும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையான 2 இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்த வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
சந்தேக நபரான பெண் மற்றும் வங்கிக் கணக்கு தொடர்பான விடயங்களை எதிர்வரும் 21 ஆம் திகதி கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
you may like this video