இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான தீவிர முயற்சியில் கஞ்சன விஜயசேகர
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுபாடு,மின் துண்டிப்பு நேரம் அதிகரிப்பு என நாளுக்கு நாள் மக்களுக்கு சுமை அதிகரிக்கின்றது.
இந்நிலையில் தமது அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டு நெருக்கடிக்கான தீர்வுகளை முன்வைக்கும் முயற்சிகளில் அமைச்சர் கஞ்சன விஜயசேகர ஈடுப்பட்டுள்ளார்.
இதற்கமைய, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களுடன் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று(16) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
Progress review meeting was held with institutes that comes under the Ministry of Power & Energy Yesterday. Discussed the Ongoing Projects, Energy policy, Renewable energy & Restructuring. Both State Ministers was assigned separate duties with each institute to coordinate. pic.twitter.com/JaQCNejjVJ
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 17, 2022
இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகள்
இந்த பதிவில்,தற்போதைய திட்டங்கள், எரிசக்தி கொள்கை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மறுசீரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இரு இராஜாங்க அமைச்சர்களுக்கு ஒவ்வொரு நிறுவனத்தையும் ஒருங்கிணைப்பதற்கான தனித்தனி கடமைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடப்பட்டுள்ள விடயங்கள்
இதேவேளை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தியாளர்களின் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்தில் இன்று காலை இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
Met with members of the Federation of Renewable Energy Developers this morning at the Ministry of Power & Energy. Discussed the outstanding payments to the renewable suppliers, new feeding tariff, CEB restructuring plans, Renewable Energy Projects & Roof Top Solar Projects. pic.twitter.com/8C5GwfRFJ2
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 17, 2022
இதன்போது, புதுப்பிக்கத்தக்க விநியோகஸ்தர்களுக்கு நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள், புதிய உணவு கட்டணம், இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதா தெரிவித்துள்ளார்.