அநுரவின் மாளிகையை முற்றுகை இடும் போராட்டக்காரர்கள்! காத்திருக்கும் கடுமையான நடவடிக்கைகள்
கடந்த சில நாட்களாக ஜனாதிபதி செயலகம் முன்பாக பரபரபாக உள்ளதை காணகூடியதாகவுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த கம்மடுவ கிராம மக்கள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்கெடெல் மற்றும் கொன்கோடியா ஆகிய கிராம மக்களே இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை,ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நிரந்தர வேலைவாய்ப்பு கோரி போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்தவிடயத்திற்கு மீண்டும் பரீட்சை எழுதினால் அதற்கான வேலைவாய்புகள் கிடைக்கும் என்று ஜனாதிபதியும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி..