நாடாளுமன்றத்தில் கஞ்சன விஜயசேகர முன்வைத்துள்ள முன்மொழிவு
எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் நாடாளுமன்ற குழுவொன்றை நியமிக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர முன்மொழிவொன்றை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(29) உரையாற்றும் போதே இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார்.
கஞ்சனவின் முன்மொழிவு
தொடர்ந்து உரையாற்றுகையில், எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் நியமிக்கப்படும் நாடாளுமன்ற குழுவிற்கு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமை தாங்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல புதிய நாடாளுமன்ற குழுக்களை நியமிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனடிப்படையில் கொள்வனவு குழுவொன்றை நியமிக்கவும் முன்மொழிகின்றேன்.
மேலும்,எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றோர், குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே குறித்த குழுவிற்கு தலைமை தாங்குமாறு எதிர்கட்சியை கோருவதாகவும் அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
ஹர்ஷ டி சில்வாவின் பதில்
இந்த முன்மொழிவு தொடர்பில் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பொது நிதி தொடர்பான குழுவிற்கு தாம் தலைமை தாங்குவதாகவும், எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவுகளை ஆராய தனது குழுவிற்கு ஏற்கனவே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.