மகிந்தவின் நெருங்கிய சகாவான ஜோன்ஸ்டனை கைது செய்ய நடவடிக்கை
லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரைக் கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, விசாரணைகளை நடத்தி அவரை கைது செய்ய 5 பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு
லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான லொறியை, ஜோன்ஸ்டனின் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு 250,000 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் எழுந்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அந்த விசாரணை தொடர்பாக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹன் பெர்னாண்டோ நேற்று குருநாகல் நிதி குற்ற புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
இது அரசாங்க சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ் உள்ளது.
பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதே குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam