பணவீக்க பட்டியலில் இருந்து படிப்படியாக கீழ் நோக்கி நகரும் இலங்கை
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார அறிவியல் துறை பேராசிரியர் ஸ்டீவ் ஹேன்க்கின் பணவீக்க பட்டியலுக்கு அமைய இலங்கை படிப்படியாக பட்டியலில் கீழ் நோக்கி நகர்ந்து வருகிறது.
இரண்டாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு வந்த இலங்கை
பணவீக்கம் தொடர்பான நாடுகளின் பட்டியலில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை தற்போது ஏழாவது இடத்திற்கு வந்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்ததுடன் சிம்பாப்வே முதலாவது இடத்தில் இருந்தது. புதிய பட்டியலுக்கு அமைய சிம்பாப்வே முதலாவது இடத்திலும் கியூபா இரண்டாவது இடத்திலும் லெபனான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கும் சிம்பாப்வே
#SierraLeone's currency redenomination is just a cosmetic change that will not crush SLE's sky-high #inflation. SLE is in 12th place in this week's inflation roundup. On Sep 8, I measured #inflation in SLE at a stunning 50%/yr. pic.twitter.com/fNd648hdyY
— Steve Hanke (@steve_hanke) September 15, 2022
இதனை தவிர துருக்கி நான்காவது இடத்திலும் மியன்மார் 5 வது இடத்திலும் வெனிசூலா 6வது இடத்திலும் உள்ளதுடன் இலங்கை 7 வது இடத்தில் உள்ளது.
எவ்வாறாயினும் சிம்பாப்வே தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து வருகிறது.
ஸ்டீவ் ஹேன்க்கின் பணவீக்க பட்டியலுக்கு அமைய மூன்று மாதங்களுக்கு முன்னர் சுமார் 150 வீதமாக காணப்பட்ட இலங்கையின் பணவீக்கமானது தற்போது 106 என்ற வீதத்தில் உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையின் உத்தியோபூர்வ பணவீக்கம் 64.30 வீதமாகும்.