இலங்கை சித்த மருத்துவத்தில் முதல் பேராசிரியர் நியமனம்! கிழக்கு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுச் சாதனை
கிழக்கு பல்கலைக்கழகம், சித்த மருத்துவத்தில் இலங்கையின் முதல் பேராசிரியராக மருத்துவர் நா.வர்ணகுலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூதவை மற்றும் பேரவை கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனம்
இந்த முதலாவது பேராசிரியர் நியமனமானது, கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவ பீடத்திற்கு கிடைத்த பெறுமையாகும்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ கற்க்கை நெறியினை உருவாக்குவதில் பேராசிரியர்.நா. வர்ணகுலேந்திரன் அரும்பாடுபட்டார்.
சித்த மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சேவைகள் இந்த நியமனத்தின் மூலம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அர்ப்பணிப்பு
பேராசிரியர் நா.வர்ணகுலேந்திரனின் அறிவு, அனுபவம் மற்றும் அர்ப்பணிப்பு, இத்துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினருக்கு தூண்டுகோலாக அமையும்.
இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழகம் சித்த மருத்துவத்தில், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மற்றும் சர்வதேச மையமாக வளரும் பாதையில் முக்கியமான முன்னேற்றத்தைக் கொண்டுவரும் வகையில் இந்த நியமனம் பார்க்கப்படுகின்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் திருகோணமலை வளாகத்தில் சித்த மருத்துவ பீடம் 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இதனால், இந்த நியமனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகவும், பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
