முட்டையொன்றை விற்பனை செய்யக்கூடிய இறுதி விலை!விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
முட்டையொன்றை விற்பனை செய்யக்கூடிய இறுதி விலையை கணக்கிட்டு, ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு நிதி மற்றும் வர்த்தக அமைச்சுக்கு பொது நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையில் கோழித் தீவனத்தை இறக்குமதி செய்வது தொடர்பான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளை கருத்தில் கொண்டு முட்டையின் விலையை கணக்கிடுமாறு, கோப் குழுவின் தலைவரான ஹர்ஷ டி சில்வா, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
முட்டையொன்றின் விற்பனை விலை
அண்மையில் நாடாளுமன்றத்தில், ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற பொது நிதி தொடர்பான குழுவில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டது.
இதேவேளை, கெசினோ வணிக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் உள்ள ஒழுங்குமுறைகள் குறித்தும் குழு விவாதித்துள்ளது, இதன்போது கெசினோ ஒழுங்குமுறை ஆணையம் இல்லாததால் தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்தும், குழு கவனம் செலுத்தியது.
உலகில் எந்த நாட்டிலும் கசினோ
ஒழுங்குமுறை ஆணையம் இன்றி கசினோ உரிமம் வழங்கப்படுவதில்லை என ஹர்ஷ டி சில்வா
இதன் போது தெரிவித்துள்ளார்.