எதிர்வரும் காலங்களில் சர்வதேச நிவாரணங்கள் கிடைக்காமல் போகலாம் - சஜித் குற்றச்சாட்டு
"மின்சார கட்டணம் பாரிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்க்கையும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன்று (23) மின்சார பாவனையாளர் சங்கத்தின் விசேட சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இந்நாட்டிலுள்ள சாதாரண மக்களின் வாழ்வுரிமையைப் போன்று பாவனையாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் முன்நிற்கின்றோம்.

ஜனநாயக ரீதியில் போராட்டம்
நாட்டில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடைபெற்றது. வீதியில் போராட்டம் நடத்துவது கூட பயங்கரவாதச் செயலாக கருதப்படுகின்ற காலகட்டமாக இருக்கின்றது.

கூட்டங்கள், அமைதியான போராட்டம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் ஆகியவை அரசமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், நாட்டு மக்களை மிகப்பெரிய ஆபத்தில் தள்ளும் பல கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சர்வதேச நிவாரணங்கள்
இது தொடர்பில் சர்வதேச சமூகம் மற்றும் அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் சர்வதேச நிவாரணங்கள் கூட கிடைக்காமல் போகலாம்.
இதனால் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படலாம். அரசு அப்பட்டமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீறி அடிப்படை உரிமைகளையும் மீறுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் "இன்று இளைஞர்களை வேட்டையாடும் யுகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வசந்த முதலிகே உள்ளிட்ட பலருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்க ஜனாதிபதியும் அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமது சொந்த அரசியல் கருத்தை முன்வைக்கும் தவறுக்காக அரசு இளைஞர்களை இப்படி நடத்துகின்றதா எனக் கேள்வி எழும்புகின்றது. அரச பயங்கரவாதத்தில் இருந்து அரசு உடனடியாக வெளியேற வேண்டும்.
அநீதிக்கும், அநியாயத்துக்கும், அடக்குமுறைக்கும் எதிராக முன்நிற்கும் இளைஞர்
சமூகத்துடன் ஒன்றிணைந்து, ஐக்கிய மக்கள் சக்தி செயற்படும்" - என்றார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan