ஜனாதிபதியின் உத்தரவையடுத்து லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு
சமையல் எரிவாயு விநியோகிக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிரடி அறிப்பொன்றை லிட்ரோ நிறுவன தலைவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் இரு தினங்களில் 15,000 எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமையல் எரிவாயுவுக்காக காத்திருக்கும் மக்களுக்கு லிட்ரோ வெளியிட்ட முக்கிய தகவல் |
வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு கையிருப்பு இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
சமையல் எரிவாயுவுக்காக வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் லிட்ரோ நிறுவன தலைவர் ஊடகங்களுக்கு இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
