இந்தியாவின் நடவடிக்கையால் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட தகவல்
சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகமாக உதவி செய்துள்ளதாக இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலகம் எவ்வாறு நிச்சயமற்றதாகவும், நிலையற்றதாகவும், கொந்தளிப்பாகவும் மாறியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஜெய்சங்கர், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் சிக்கலான உலகளாவிய நிலப்பரப்பை' பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இலங்கை, கடந்த ஆண்டு, மிகவும் ஆழமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது, முன்னெப்போதும் செய்யாத வகையில் இந்தியா உதவி செய்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு செய்ததை விட இலங்கைக்கு இந்தியா பாரிய சேவைகளை செய்துள்ளது. எவரேனும் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தால், இந்தியாவின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவதானிக்க முடியும் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |