இலங்கைக்குள் நுழைய முயற்சித்த சீன பிரஜையினை நாடு கடத்துமாறு சீன தூதரகம் கோரிக்கை
கடந்த வாரத்தில் போலி கடவுச்சீட்டில் இலங்கைக்குள் நுழைய முயற்சித்த சீன வர்த்தகர் ஒருவரை நாடு கடத்துமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் சீன தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலிக் கடவுச்சீட்டில் வந்ததாக கூறப்படும் தொழிலதிபர் லி பான், சீனா செல்ல மறுத்து, நாடு கடத்தப்பட்டதை எதிர்த்து தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு
இந்த வழக்கானது நாளையதினம் (29.05.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
எனினும் சட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
லிபேன் என்ற வர்த்தகர் துபாயில் இருந்து கடந்த 18ஆம் திகதி இரவு 9.50 மணியளவில் ஐக்கிய ராச்சிய விமானத்தில் வந்திருந்தார்.
அத்துடன் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் (BIA) குடிவரவு முனையத்தில்
பிரசன்னமாவதற்கு முன்பு அவர் இரண்டு மணி நேரம் குறித்த பிரதேசத்தில் "சுற்றித்
திரிந்துக் கொண்டிருந்தார்" என்று குடிவரவு தரப்புக்கள் தெரிவித்தன.
தாம் வந்த அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காக அவர் இதனை செய்திருக்கலாம் குடிவரவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
நாடு கடத்தப்படுவதற்கான ஆவண சமர்ப்பிப்பு
பின்னர், மின்னணு பயண அங்கீகாரம் அடங்கிய மேற்கு ஆபிரிக்கா நாடான கினியின் கடவுச்சீட்டை லிபேன் ஒப்படைத்தபோது குடிவரவு அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.
எனினும் அந்தக் கடவுச்சீட்டின் சுருக்கமான தடயவியல் சோதனையை மேற்கொண்டபோது அந்த ஆவணம் போலியானது என்று கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் லிபேனை நாடு கடத்தப்படுவதற்கான ஆவணங்களை குடிவரவு அதிகாரிகள் இறுதி செய்தபோது அவர் விமான நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
அத்துடன் சீனாவுக்கோ அல்லது டுபாயிக்கோ திருப்பி அனுப்பப்படுவதை அவர் கடுமையாக எதிர்த்தார்.
போலியான கடவுச்சீட்டுக்களுடன் நாட்டுக்குள் பிரவேசித்த சீன பிரஜை வழங்கியுள்ள வாக்கு மூலம் |
இதன்போது அவருடன் வந்திருந்த மற்றொரு சீன நாட்டவர் மற்றும் ஒரு எகிப்தியர் ஆகியோர் லிபேன் தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.
எனினும் அவர்களின் ஆவணங்கள் ஒழுங்காக இருந்ததால் விமான நிலையத்தை விட்டு வெளியேறினர்.
இடைப்பட்ட காலத்திலேயே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் இருந்து குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் இலுக்பிட்டியவிடவுக்கு குறித்த சீன வர்த்தகரை விடுவிக்கக்கோரிய கடிதம் அனுப்பப்பட்டு, அவர் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |