போலியான கடவுச்சீட்டுக்களுடன் நாட்டுக்குள் பிரவேசித்த சீன பிரஜை வழங்கியுள்ள வாக்கு மூலம்
இரண்டு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் சீனப் பிரஜை தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கமைய பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
இதன்போது பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (22.05.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை சீன தூதரக கலந்துரையாடல்
மேலும் தெரிவிக்கையில், குறித்த சீன பிரஜை வரவழைக்கப்பட்டு இலங்கையிலுள்ள சீன தூதரகத்துடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த சீனப்பிரஜையும் ஏனைய இரண்டு பேரும் கடந்த (18.05.2023) தினமன்று போலியான கடவுச்சீட்டுக்களுடன் நாட்டுக்குள் பிரவேசித்ததாகவும், இதன்போது சீனப்பிரஜையை, ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ, தமது செல்வாக்கை பயன்படுத்தி விடுவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ மறுத்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam