கோட்டா வீட்டுக்கு போ: பொருளாதார நெருக்கடி: எச்சரிக்கை நிலையில் அரசியல் ஸ்திரமின்மை
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலைக்குள் அரசியல் ஸ்திரமின்மை தொடர்கிறது.
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்கொண்ட 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பு முடிவின்றி நிறைவடைந்துள்ள நிலையில் இந்த ஸ்திரமின்மை உறுதிப்படு;த்தப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களின் "கோட்டா கோ ஹோம்"எழுச்;சி தற்போதைக்கு நிறுத்தப்படாது என்றே கருதலாம்.
இது நாட்டில் பாரிய பிரச்சினையை அடுத்து வரும் நாட்களில் ஏற்படுத்தும் என்பதையும் கூறமுடியும்.
அத்துடன் தமது புதுவருட காலத்தில்கூட தாம் தெரிவுசெய்த அரசாங்கம் உரிய வகையில் செயற்படவில்லை என்ற நிலை, சிங்கள மக்கள் மத்தியில் நடப்பு அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை தீவிரப்படுத்;தும்.
ஏனெனில் சிங்கள மக்கள் புதுவருட நிகழ்வை பெருவிழாவாக முன்னெடுக்கும் பழக்கத்தை கொண்டவர்கள்.
அதேநேரம் இதுவரையான காலப்பகுதியில் 1970-77 ஆம் காலப்பகுதிக்கு அப்பால் ஏனைய காலங்களில் எந்தவொரு அரசாங்கமும் புதுவருட காலங்களில் சிங்கள மக்களை சந்தோசப்படுத்தாமல் இருந்ததில்லை.
எனவே தற்போதைய நிலை சிங்கள மக்கள் மத்தியில், அரசாங்கம் மீதான அதிருப்தியை அதிகரிக்கவே செய்யும்.
நாட்டின் நிர்வாகத்தை முன்கொண்டு செல்ல இன்று அமைச்சர்கள் இல்லை என்ற நிலையில் அமைச்சர்கள் இன்று மீண்டும் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களை நியமிப்பதால், பொதுமக்களுக்கு பொருளாதார ரீதியில் நன்மைகள் ஏற்படப்போவதில்லை என்ற போதிலும் நடப்பு நிர்வாகங்களில் ஒரு மேலாண்மை இருக்கும் என்று நம்பலாம்.
இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது அரசியலமைப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை மாத்திரம் அமுல்படுத்துவதற்கு உடன்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் எதுவும் இல்லாதநிலையில், தேசிய நிறைவேற்று சபையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் (அதாவது தமது நிறைவேற்று அதிகாரத்துக்கு அப்பால் தமக்கு பரிந்துரைகளை செய்யும் ஒரு பொறிமுறையை அவர் விரும்பவில்லை என்பதை இது காட்டுகிறது.)
இதற்கு மத்தியில் அனைத்துக்கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு யோசனை ஒன்றை நாடாளுமன்றில் நிறைவேற்றவேண்;டும் என்ற பரிந்துரையை புதிய அரசியலiமைப்பு பணிகளில் ஈடுபட்ட முக்கிய ஜனாதிபதி சட்டத்தரணிகள், ஜனாதிபதியிடமும், சஜித் பிரேமதாசவிடமும் வலியுறுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது அம்சங்களாகும்.
இந்தநிலையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய இரண்டு கட்சிகளும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நேற்று முன்தினம் கலந்துரையாடின.
எவ்வாறாயினும், நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் அரசாங்கத்தைக் கவிழ்க்குமாறு சஜித் பிரேமதாச, சந்திப்பின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வலியுறுத்தினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் உடன்பாடு ஏற்படவில்லை
இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பியுடன் சந்திப்பு ஒன்றை கோரி கடிதம் எழுதியுள்ளது.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
