யாழில் தீலிபனின் நிகழ்வில் குழப்பம் : சர்ச்சையாகிய துண்டுப்பிரசுரம்
யாழில் இன்றையதினம்(26.09.2025) தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திலீபனின் நினைவுநாளின் இறுதி நாளான இன்று உணர்வு பூர்வமாக நிகழ்வுகள் தமிழர் பகுதியில் இடம்பெற்ற வேளையில் யாழில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் “அரசியல் கட்சிக்கான வேண்டுகோள்” என்ற தலைப்பிடப்பட்ட நிலையில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ஆக்கப்பார்க்கும் சிலர்
அதில் “மக்களுக்கான சேவைகளைச் செய்வதற்காகவே மக்களாலே அரசியல் பிரமுகர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்கள் மக்களுக்கான சேவையினை மட்டுமே முன்னெடுக்க வேண்டும்.
இச்சேவையின் ஊடாக மக்கள் இவர்களை விரும்ப வேண்டும். சிலர் மக்களில் எல்லா விடயங்களுக்குள்ளும் மூக்கை நுழைத்து அதனை அரசியல் ஆக்கப்பார்க்கின்றனர்.
தற்போது இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி இதிலிருந்து உடன் வெளியேற வேண்டுமென வேண்டுகின்றோம்“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam