சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! தலைமை பீடாதிபதிகளின் ஆசியுடன் உதயமாகும் சர்வகட்சி அரசாங்கம்
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில் தற்போதைய அரசாங்கம் நீக்கப்பட்டு விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குருதெனிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் வீதியில் இறங்கி போராடும் மோசமான நிலை
நாட்டின் நிலைமை தற்போது மக்கள் மத்தியில் சூடுபிடித்துள்ளமையால் தலைமை பீடாதிபதிகளின் ஆசியுடன் அனைத்துக் கட்சி ஆட்சியை விரைவில் அமைக்க வேண்டும்.

இவ்வாறு கட்சி ஆட்சியை அமைக்காவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராடி நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ Cineulagam