சிரித்துக்கொண்டு கொலை செய்பவரே கோட்டாபய! நாடாளுமன்றில் அனுரகுமார
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி சிரித்துக்கொண்டே கொலையை செய்பவர் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கும் திறமை இது மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரால், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுக்காண்பதற்கான எந்த திட்டங்களும் இல்லையென்றும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே இன்று அவர் பதுங்குக்குழியில் இருப்பதாக அனுரகுமார தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நேற்றைய போராட்டத்தின் கொல்லப்பட்டவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதை பார்க்கும் அளவுக்கு நாடு சென்றுள்ளது.
இதேவேளை பசிக்கு கட்சி மற்றும் நிறங்கள் இல்லையென்றும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



