உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு செல்ல அரசாங்கம் திட்டம்
டி.டி.ஆர் என்று உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு செல்ல அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் அதை எவ்வாறு தொடர்வது என்பது குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசாங்க தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நிலைமையின் தீவிரத்தை கருத்திற்கொண்டு, இலங்கை அதன் சர்வதேச கடனை மறுசீரமைப்பதற்கு முன் உள்நாட்டு கடன் செயல்முறையை முடிக்க வேண்டியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சர்வதேச கடன்
இலங்கையின் சர்வதேச கடன் வழங்குநர்கள் நாட்டுக்கு உதவுவதற்காக தியாகங்களைச் செய்யத் தயாராக உள்ளனர்.
இந்த நிலையில் உள்நாட்டு கடன் வழங்குபவர்களும் அதே முயற்சியை மேற்கொள்வது நியாயமானது.இல்லையெனில், சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளிடமிருந்து உதவி பெறுவது மிகவும் கடினமாகிவிடும் என்று அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி நாடாளுமன்றத்தின் வார இறுதி கூட்டத்தை நடத்துவது குறித்து முடிவெடுப்பதற்காக அடுத்த வாரம் சிறப்பு கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு தயாராக இருப்பதாக அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 6 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
