இலங்கையின் மக்கள் போராட்டத்துக்கு இங்கிலாந்தின் ஒலிவியர் விருதில் கிடைத்த அங்கீகாரம்(Video)
இங்கிலாந்தில் நடைபெற்ற ஒலிவியர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற இலங்கையைச் சேர்ந்த ஹிரன் அபேசேகர, இலங்கையில் வீதிகளில் இறங்கிப் போராடிய மக்களுக்கு தமது மரியாதையை செலுத்தினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தமக்கான விருதை பெற்றுக்கொண்ட அவர், இந்த கடினமான நேரத்தில் சக இலங்கையர்களுடன் தாம்; இருந்திருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்த உரையின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது
Life of Pi என்ற மேடை தழுவலுக்காகவே சிறந்த நடிகர் விருது அவருக்கு கிடைத்தது. அபேசேகர கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி கற்றார்.
2007 இல் பிரிட்டிஸ் கவுன்சில் தயாரிப்பான ஈக்வஸில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
