தனிமைப்படுத்தல் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இன்று (02) காலை தனிமைப்படுத்தப்பட்ட பிலியந்தலை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தம்பே, படகெத்தர வடக்கு, கெஸ்பேவ தெற்கு, பெலென்வத்த கிழக்கு, மாகந்தன கிழக்கு, மாவித்தர வடக்கு, மடபாத, மஹரகம மற்றும் ஆருவ்வத்த வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,மஹரகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட அரவ்வல வடக்கு கிராம சேவகர் பிரிவும் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 19 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
