உங்கள் கிராமங்களிலுள்ள சக்தியை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குங்கள்: புத்திக்க பத்திரன
நாங்கள் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து முழுப்பலத்தையும் காண்பித்து கொண்டிருக்கின்றோம். அது உங்களுக்கு தெரியும் சஜித் பிரேமதாசா இந்தநாட்டின் அடிமட்டத்திலிருந்து செயற்பட்டு கொண்டிருக்கின்றார்.
அதனால் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் உங்களது கிராமங்களிலுள்ள சக்தியை எங்களுடைய ஐக்கிய மக்கள் சக்திக்குக்கு வழங்குங்கள் என மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (06.01.2023) இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு வவுனியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிராம வேலைத்திட்டங்கள்
மேலும் தெரிவிக்கையில்,“இந்தக் கிராமங்களையும் கிராமங்களிலுள்ள வேலைத்திட்டங்களையும் முன்கொண்டு செல்ல ஒரே வளம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் தான் உள்ளது.
நகரசபை, மாநகரசபை, மாகாணசபை தேர்தலின் போது அதனைப் பெற்றுக்கொண்டு இந்த நாட்டினைக் கட்டியெழுப்பும் ஒரு கொள்கையுடனேயே ஐக்கிய மக்கள் சக்தியாக இங்கு வந்துள்ளோம்.
நாங்கள் எங்களுடைய விஞ்ஞானபத்தை வெற்றிக்கொள்ளவே வேண்டி நிற்கின்றோம்.
பொருளாதார சீரழிவு
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி எமது நாடு சுதந்திரமடைந்து 75 வருடங்கள் ஆகின்றது.
இந்த 75 ஆண்டுகளாக அரசாங்கம் செய்த நல்ல காரியங்களும் இருக்கின்றது, கூடாத காரியங்களும் இருக்கின்றது. கூடாத காரியமாக இந்த நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து போயுள்ளது.
முப்பது வருட காலம் யுத்தம்
இங்கு முப்பது வருட காலம் யுத்தம் இடம்பெற்றுள்ளது. இந்த மண்ணில் இரத்தங்கள் சிந்தப்பட்டுள்ளன.
75 வருடங்களாக செய்ய வேண்டியவற்றை செய்யாத காரணத்தினாலேயே இங்கு யுத்தம் ஒன்று இடம்பெற்றது.
வடக்கில் இரு யுத்தங்கள் நடைபெற்றது. 71 ஆம்
ஆண்டு மற்றும் 82ஆம் ஆண்டுகள் தற்போது எமக்குத் தேவை தமிழ் சிங்களம் முஸ்லிம்
மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதாரத்தால் வீழ்த்தப்பட்ட இந்த நாட்டினை
கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஒரே கொள்கைதான் எங்கள் அனைவரிடமும் உள்ளது.” என்று
மேலும் தெரிவித்துள்ளார்.
