வீதியில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருவர் மீட்பு(Photos)
வவுனியா - சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் வீதியில் உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (24.12.2022) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வெட்டுக்காயத்துடன் மீட்பு
கோமரசன்குளம் பகுதி ஊடாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் சென்று கொண்டிருந்த போது வீதியில் வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட குறித்த நபரை அவதானித்தது நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
அத்துடன் மேலும் ஒருவரும் குறித்த பகுதியில் வெட்டுக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் அப்பகுதி மக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போத்தல்களினால் தாக்குதல்
போத்தல்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினால் இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
50 மற்றும் 53 வயதுடைய இருவரே காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
