மூடப்படும் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு ஆலை (Photos)
நுரைச்சோலை, நிலக்கரி அனல்மின் நிலையத்தின், மூன்று ஆலைகளில், ஒன்று இன்று(23 டிசம்பர்) முதல் மூடப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த நிலக்கரி ஆலை, தற்போதுள்ள நிலக்கரி இருப்புகளை நிர்வகிக்கவும், வழக்கமான பராமரிப்புக்காகவும், மறு அறிவிப்பு வரும் வரை, இன்று முதல் மூடப்படும்.
மின் வெட்டு
எவ்வாறாயினும், இதனால் ஏற்படும் மின்சார இழப்பு, ஏனைய கிடைக்கக்கூடிய வழிகளில் ஈடுசெய்யப்படும் என்று இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது.
இதன்கீழ் தினசரி இரண்டு மணி நேரம் 20 நிமிட மின்வெட்டுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், நுரைச்சோலை "அனல்மின் நிலையத்தை சீனாவுக்கு விற்க வேண்டாம் என தெரிவித்து நுரைச்சோலை அனல்மின்னிலையத்திற்கு முன் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
