தமிழர் பகுதியில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: பொலிஸார் வெளியிட்ட தகவல்
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்
பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு பொலிஸபர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் 24 வரையான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தையை கொலை செய்ய முயற்சி
16 வயதுக்கு குறைவான 14 சிறுமியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை கொலை முயற்சிக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. 07 சிறுவர்கள் அடித்து காயப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பாலியல் சேட்டைகள்
அதேபோன்று 07 சிறுவர்கள் மீது பாலியல் சேட்டைகள் புரியப்பட்டதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. பாடசாலை மாணவன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய நிலையிலும் திருட்டு சம்பவத்துடன் தொடர்பட்ட நிலையில் மற்றுமொரு ஒரு சிறுவனும் சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும் இதன்போது தெரிவித்துள்ளனர்.
விழிப்புணர்வு செயலமர்வு
மாணவர்கள் மத்தியில் வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வுகள் போதைப்பொருள் தடுப்பு மற்றும்
சிறு குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டில் 215 வரையான விழிப்புணர்வு செயலமர்வுகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
