மினுவாங்கொடை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
மினுவாங்கொடை - வகோவ்வ பிரதேசத்தில் 83 வயதுடைய முதியவர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்குமான வாக்குவாதம் முற்றியதையடுத்து சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சம்பவத்தில் காயமடைந்த நபர் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ News Lankasri

குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. கண் கலங்கிய புகழ், சுனிதா Cineulagam
