பேரனை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற பாட்டன்
18 வயதான இளைஞனான பேரனை கொலை செய்து விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகி இருந்த 70 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொட்டவேஹெர பொலிஸ் பிரிவில் கடந்த 17 ஆம் திகதி தென்னம் மட்டையால் தாக்கி சந்தேக நபர் இந்த இளைஞனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை இன்று நிக்கவரெட்டிய நீதவான் முன்னிலையில் நேர்நிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபரான பாட்டனார், பாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்த போது, பாட்டி தனது 18 வயதான பேரனிடம் அதனை கூறியுள்ளார்.
அப்போது பேரன் இப்படியான செயலில் ஈடுபட வேண்டாம் என கூறியதால், ஆத்திரமடைந்த 70 வயதான பாட்டன், பேரனை தென்னம் மட்டையால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாய் வெளிநாடு சென்றுள்ளதுடன் தந்தை கொழும்பில் தொழில் புரிந்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.