கோவிட் உடலங்களை அடக்கம் செய்ய மற்றுமொரு இடத்திற்கு ஒப்புதல் கோரும் சமூகத் தலைவர்கள்

Srilanka Covid Death
By Ajith May 23, 2021 06:45 PM GMT
Report

கோவிட் தொற்றினால் மரணமாவோரின் உடலங்களை அடக்கம் செய்ய மேலும் ஒரு அடையாளம் காணப்பட்ட ஒரு இடத்துக்காவது அரசாங்கத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று சமூகத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்று காலை வரை மட்டக்களப்பு ஒட்டமாவடியில் உள்ள முஸ்லிம் மையவாடியில் கோவிட் தொற்றினால் மரணமானவர்களி;ன் 224 ஆக உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன .

இதில் தகனத்தை விரும்பாத ஏனைய மதத்தினரின் உடலங்களும் உள்ளடங்கியுள்ளன. கோவிட் தொற்றினால் மரணமாவோருக்காக ஒதுக்கப்பட்ட பகுதி ஆரம்பத்தில் 10 ஏக்கர் என்று கூறப்பட்டது. எனினும் அது மூன்று ஏக்கர்களாகக் குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக அனைத்திலங்கை ஜனாஸா சங்கத்தின் தலைவர் நியாஸ்டீன் சத்தார் தெரிவித்தார்.

கோவிட் தொற்றினால் மரணமாகும் ஒவ்வொரு உடல்களும்,மூன்று அடி இடைவெளியில் அடக்கம் செய்யப்படுகின்றன. இதன்படி மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் 250-270 உடலங்களை மட்டுமே அடக்கம் செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

கோவிட் தொற்றினால் மரணமாவோரை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதித்த இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் கோவிட் தொற்றினால் மரணமானோரின் சுமார் 335 உடலங்கள் தகனம் செய்யப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த நேரத்தில், உடனடி பிரச்சினை எதுவும் இல்லை, ஆனால் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சமூகத் தலைவருமான அலி ஷாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களை அடக்கம் செய்ய விரும்பும் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் பௌத்தர்களுக்கும் இந்த பகுதியில் இடமளிக்கப்பட்டுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் தொற்றினால்  மரணமாவோரின் உடலங்களை அடக்கம் செய்ய நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நானாயக்காரரின் வேண்டுகோளின் பேரில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை மற்றும் தேசிய புவியியல் பணியகம் ஆகியவற்றால் அடையாளம் காணப்பட்ட பிற இடங்களும் உள்ளன.

” இவற்றில் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இறக்காமத்திலும் மற்றொரு தளம் மன்னாரிலும் உள்ளன. இந்த நிலையில் அடக்கத்துக்காக ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை வழங்கினால் அது, சுகாதார அதிகாரிகள் உட்பட்டவர்களின் சுமையை எளிதாக்கும். மரணமாவோரின் உடலங்களை அவரவர் சொந்தப் பிரதேசங்களில் அடக்கம் செய்கின்றபோது அந்தத்த பிரதேசத்தில் பணிகளில் இருக்கும் சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட முடியும் என்றும் அலி ஷாகிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US