சுரேஷ் சாலேவின் கணினியில் மறைந்திருக்கும் ஆதாரங்கள்! கணினியை திறந்தால் முக்கிய புள்ளிகள் சிறையில்...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகப்பட்டு பெப்ரவரி மாதமளவில் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக அவர் உணவைத் தவிர்த்து வந்ததால் உடல்நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே தனது கணினிக்கான கடவுச்சொற்களை தர மறுத்துள்ளார்.
இந்தநிலையில், கணினிக்கான கடவுச்சொற்களை பெற்று திறக்கப்பட்டால் பல அரசியல்வாதிகளுக்கு சிறை திறக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியுடன் கணினியை திறந்தால் பல விடயங்கள் வெளிவரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க..
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri