ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் சுங்கக்கட்டணம் விதிக்க அனுமதிக்க முடியாது: மேக்ரோன் அதிரடி
பிரான்சில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு ஈரான் சுங்கக்கட்டணம் விதிப்பதை தடுப்பதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யப்போவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் உறுதியளித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே TF1 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடையின்றி திறந்திருப்பதை உறுதி செய்வதற்காக, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா படைகள் இணைந்த கூட்டுப் பணிக்குழு மிக விரைவாக அங்கு நிலை நிறுத்தப்பட தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேவைப்பட்டால் பிரான்சின் முதன்மை விமானம் தாங்கி போர்க்கப்பலான 'சார்லஸ் டி கோல்' இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்குள் அந்தப் பகுதிக்குச் சென்றடையக்கூடிய தயார் நிலையில் உள்ளதாகவும் ஜனாதிபதி மேக்ரோன் எச்சரித்துள்ளார்.
வெளிச்சத்திற்கு வந்த 5 கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள்..! பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..