போராட்டத்தில் குதித்த வெளிநாட்டுப் பல்கலைக்கழக பட்டதாரிகள்! விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
வெளிநாட்டுப் பல்கலைக்கழக பட்டதாரிகள் இன்றையதினம்(15.6.2026) கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு, 2020ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழக பட்டதாரிகளே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடனடியாக நடவடிக்கை
தமக்கான நியமனங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டதாரிகள் வலியுறுத்தினர்.

“எங்களுக்கு வாக்குறுதி வேண்டாம், அமுலாக்கம் வேண்டும், SC FR 16/2021 தீர்ப்பை முழுமையாக அமுல்படுத்து, 6 ஆண்டுகள் காத்திருக்கிறோம் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமக்கு நீதி வழங்கக் கோரி பட்டதாரிகள் அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan