வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கான முக்கிய தகவல்
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வெளிவிவகார அமைச்சு வழங்கியுள்ளது.
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வெளியிட்டுள்ள தகவலின் படி, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் முறைப்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கான புதிய தளமான 'LankaKonect' என்ற கைபேசி செயலியொன்று அறிமுக்கப்படுத்தப்படவுள்ளது.
குறித்த செயலியானது நாளைய தினம் (16.06.2026) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
புதிய முயற்சி
அணுகக்கூடிய, பதிலளிக்கக்கூடிய மற்றும் மக்களுக்கு உகந்த தூதரக சேவைகளை நோக்கிய ஒரு படியாக இந்த புதிய முயற்சி அமையும்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து பெறப்படும் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை கையாள்வதை முறைப்படுத்துவதற்கும், தூதரக சேவைகளில் விரைவான பதிலளிப்பு மற்றும் மேம்பட்ட வெளிப்படைத்தன்மையை வழங்குவதற்கும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.