இலங்கையில் இன்று உச்சம் தொட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
இலங்கையில் மேலும் 615 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,843 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கோவிட் நோயாளர்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 111,705 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து 97,242 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும், கோவிட் தொற்றுக்குள்ளாகி 687 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
