மட்டக்களப்பு மாநகரசபையின் ஒரு பகுதி முடக்கம்! 32 பேருக்கு தொற்று
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திசவீரசிங்கம் பிரதேசத்தில் உள்ள மூன்று வீதிகள் கோவிட் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு, திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் இன்று 11 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இந்த வீதிகள் முடக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில்,கோவிட் தொற்றாளராக இனங்காணப்பட்டதை தொடர்ந்து இன்று அவருடன் தொடர்புடைய 24 பேர் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் மேலும் 11பேர் கோவிட் தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து
அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 40 குடும்பங்கள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் திசவீரசிங்கம் சதுக்கத்தின் மேற்கு வீதியில் உள்ள மூன்று குறுக்கு வீதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.







ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
