இலங்கையில் அதிக ஆபத்தாக மாறியுள்ள கோவிட் தொற்றால் 9 பேர் பலி
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 696 ஆக அதிகரித்துள்ளது.
இதன்போது கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 94 வயதுடைய ஆண் ஒருவரும், பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும், லெவ்ல பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், தென்னெகும்புர பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும், மாலம்பே பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய ஆண் ஒருவரும், கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரும், வரகாமுர பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இன்று மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து வந்த 48 பேர் உட்பட 1891 பேர் கோவிட் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பின், மஹரகம-அரவ்வல வடக்கு நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் பிலியந்தலையின் 10 கிராமசேவையாளர் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படுகின்றன.



ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
