சிறுவர் தொடர்பில் நாடாளுமன்றக்குழு வெளியிட்டுள்ள தகவல்
2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 168 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர் என்று நாடாளுமன்றக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான பாதீட்டு திட்ட முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளை உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
பெண்கள் நலனில் கவனம் செலுத்தாமை
இதன்போது, சிறுவர்களுக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கான ஒரு முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது மிகவும் அவசரமான தேவை குறித்து சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.
சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் தேவைப்படும் பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான அமைப்பைத் தயாரிப்பது தொடர்பிலும் குழுவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெண்கள் நலனில் கவனம் செலுத்தாமையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் மற்றும் பாடசாலை மாணவிகள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கமளித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 17 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
