இலங்கையில் தடையில்லா மின்சாரத்துக்காக அமைச்சரின் மற்றும் ஒரு உறுதி!
மின்சார விநியோகத்துக்கு தேவையான எரிபொருள் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தடையில்லா மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகே தெரிவித்துள்ளார்.
இதுவரை 10,000 மெற்றிக்தொன் டீசல் கிடைத்துள்ளது.
அது களனி திஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜனவரி 22 வரை போதுமான உலை எண்ணெய் உள்ளது.
இதனை தொடர்ந்து, ஜனவரி 22ஆம் திகதி முதல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் செயற்படத் தொடங்கியவுடன் மின்சாரத் தடைகள் இருக்காது என லொகுகே தெரிவித்தார்.
அத்துடன் பெப்ரவரியில் உலை எண்ணெயை வழங்குமாறு, மின்சார சபை, மின்சக்தி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.



