மட்டக்களப்பில் வாள்களுடன் மூவர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவில் வாள்கள் மற்றும் கைக் கோடரி என்பவற்றுடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.சுதர்சன் தெரிவித்துள்ளார்.
சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி விநாயகர் கிராமத்தில் வாள்களுடன் குழுவொன்று சுற்றித்திரிவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக ஆறு வாள்கள் மற்றும் ஒரு கைக் கோடரி என்பவற்றுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவர்களை ஏறாவூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
