இலங்கையுடன் எச்சரிக்கையாக செயற்படும் இந்திய வங்கிகள்!
இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடி நிலவும் நிலையில் இந்திய வங்கிகள் இலங்கையுடன் எச்சரிக்கையான போக்கை கடைப்பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
டிசம்பர் தொடக்கத்தில், இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு மாத இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.
இந்தநிலையில் இலங்கைக்கான ஏற்றுமதி கட்டண தள்ளுபடியில் முழுமையான தடையை விதிக்கவில்லை.
எனினும் நாணயக்கடிதம் வழங்கும் வங்கி வரம்புகளின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படுகிறது என்று இந்திய நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத் ஸ்டேட் வங்கியின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
HDFC வங்கி இலங்கைக்கான ஏற்றுமதிக்கான, LC என்ற நாணயக்கடிதங்களை கையாள்வதில் மெதுவாக போக்கை கொண்டுள்ளது.
Axis வங்கி இலங்கைக்கான ஏற்றுமதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இந்திய நிறுவனங்களுக்கு நிதியளித்து வருகிறது.
ICICI வங்கி இலங்கைக்கான வரம்புகளைக் குறைத்துள்ளது.
இதேவேளை வங்கிகள் மற்றும் இந்திய ஏற்றுமதியாளர்கள் $1.5 பில்லியன் கடன் வரிக்காக காத்திருக்கின்றனர்.
இதில், 500 மில்லியன் டொலர் வரியை எக்ஸிம் வங்கி இலங்கைக்கு விரைவில் வழங்கவுள்ளது.
இந்தப் பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
